மது விற்ற 11 பேர் கைது


மது விற்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 1:39 AM IST (Updated: 26 April 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கந்தர்வகோட்டை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  கந்தர்வகோட்டையில் மதுவிற்ற நாகராஜ் (வயது 23), கவிக்குயில்(35), அமுதா (28), சசிகலா (52), சசிகுமார் (38) ஆகிய 5 பேரை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.  மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆவூர் அருகே உள்ள குமரபட்டி பகுதியில் மது விற்றதாக வேல்முருகன் (40), சந்திரசேகர் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை புதிய பஸ் நிலையம் மற்றும் செட்டியபட்டி பகுதிகளில் மது விற்ற துரைராஜ் (50), பெருமாள் (45), சண்முகம்(56) ஆகிய 3 பேரை விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் கைது செய்தார். வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் வழியில் நரிக்குளம் அருகேயுள்ள தென்னந்தோப்பு பகுதியில் மது விற்ற பள்ளத்தி விடுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துரைராஜ் (42) என்பவரை வடகாடு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகேசன் கைது செய்தார். 


Next Story