துபாய், ஷார்ஜா விமானங்கள் ரத்து: முறையாக தகவல் தெரிவிக்காததால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி


துபாய், ஷார்ஜா விமானங்கள் ரத்து: முறையாக தகவல் தெரிவிக்காததால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி
x
தினத்தந்தி 26 April 2021 1:45 AM IST (Updated: 26 April 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

துபாய், ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாக தகவல் தெரிவிக்காததால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.


செம்பட்டு, ஏப்.26-
கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் திருச்சியிலிருந்து ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விமான நிறுவனங்கள் அந்த விமானங்களில் செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காததால், அவர்கள் நேற்று முன்தினம் இரவே விமான நிலையத்துக்கு வந்து இருந்தனர். விமான நிலையத்துக்கு வந்த பின்பே அவர்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. நேற்று இரவு முதலே ஊரடங்கு தொடங்கிவிட்டதால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லமுடியாமல் விமான நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியிலேயே நேற்று தங்கி பொழுதை கழித்தனர்.

Next Story