கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் காயம்


கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 26 April 2021 1:50 AM IST (Updated: 26 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

வள்ளியூர், ஏப்:
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள சொத்தவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது தம்பி பால்துரையுடன் வேலை சம்பந்தமாக நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தங்கநாடார், பால்துரை ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story