2 பெண்களிடம் நகை பறிப்பு


2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 26 April 2021 1:53 AM IST (Updated: 26 April 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

2 பெண்களிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அமுதா(வயது 62). இவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர், அவர் அந்த பகுதியில் உள்ள பூங்கா அருகே நின்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுபோல், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா(59). இவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது இவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிசென்றனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story