கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர்
வாகனங்களில் வந்தவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர்
மேலூர்
மேலூரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து இன்றி அனைத்து ரோடுககும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை, திருப்பத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ரோடுகள் மேலூர் நகரினுள் சந்திக்கும் முக்கிய பகுதியான செக்கடிபஜார் ஆகும். இங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அத்தியாவசியமான தேவைகள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை கையெடுத்து கும்பிட்டு, ‘சாமி, சாமி... வீட்டுக்குள்ளே இருங்க சாமி’ என கிராம வழக்கப்படி பேசி திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் மேலூர் பகுதி கிராமங்களில் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லாமல் கிராம மக்கள் எப்போதும் போலவே வெளியே சென்று வந்தனர்.
Related Tags :
Next Story