கோவில் காளை செத்தது


கோவில் காளை செத்தது
x
தினத்தந்தி 26 April 2021 2:00 AM IST (Updated: 26 April 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே கோவில் காளை செத்தது.

அன்னவாசல்
இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அந்த கோவில் காளை செத்தது. பின்னர் குரும்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள இரட்டை குதிரை கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அந்த காளை வைக்கப்பட்டது. இதில் இருந்திராபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் அந்த காளை அடக்கம் செய்யப்பட்டது.

Next Story