குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 26 April 2021 2:33 AM IST (Updated: 26 April 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

திருவேங்கடம், ஏப்:
குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் மூலமாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையொட்டி 10-ம் திருநாளான நேற்று நடைபெற இருந்த ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2-வது முறையாக தேராட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story