கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2021 9:07 PM GMT (Updated: 2021-04-26T02:37:07+05:30)

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி அமுதா என்ற தமிழரசி(வயது 48). இவர் சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழரசி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், அங்கு சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story