மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் + "||" + Seizure of 2 cattle carts carrying sand

மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோவிந்தபுத்தூரில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், வண்டிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனையிட்டபோது, அவற்றில் கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல்
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல் லாரி பொக்லைன் எந்திரம் பறிமுதல்
2. மணல் கடத்தல்; 2 பேர் கைது
போலீசார் நேற்று முன்தினம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
3. மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறினார்.
4. மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
5. மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது
தா.பழூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.