சேலத்தில் அம்மா உணவகங்களில் இட்லி வாங்க மக்கள் கூட்டம்
அம்மா உணவகங்களில் இட்லி வாங்க மக்கள் கூட்டம்
சேலம்:
சேலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. இதனால் காலையில் இட்லி வாங்க அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் நேற்று காலை 7 மணிக்கு இட்லி வாங்க குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளியை மறந்து நீண்ட வரிசையில் காத்திருந்து இட்லியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் இட்லி தீர்ந்துவிட்டதால் உடனடியாக சாம்பார் மற்றும் தயிர்சாதம் தயார் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 1,200 இட்லி விற்பனை செய்யப்பட்டதாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், அஸ்தம்பட்டி, வின்சென்ட், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் பொதுமக்கள் பலர் வந்து காலையில் இட்லி மற்றும் மதியம் வேளையில் கலவை சாதங்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது.
Related Tags :
Next Story