அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 25 April 2021 10:45 PM GMT (Updated: 25 April 2021 10:45 PM GMT)

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 
கால்நடை சந்தை
அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஈரோடு, பெருந்துறை, மேட்டூர், பண்ணவாடி, தர்மபுரி, கொளத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும், கொங்கு இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும்  விற்பனை ஆனது. 
நாட்டு பசு மாடு
நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. 
எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. 
 ஈரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.

Next Story