மானிய விலையில் விதைநெல் வினியோகம்- வட்டார வேளாண்மை அதிகாரி தகவல்


மானிய விலையில் விதைநெல் வினியோகம்- வட்டார வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 April 2021 4:17 AM IST (Updated: 26 April 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதைநெல் வினியோகிக்கப்படுவதாக வட்டார வேளாண்மை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

டி.என்.பாளையம்
தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கியக் காரணிகளாக அமைகிறது. எனவே நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்திற்கேற்ற ரகங்களை தேர்வு செய்யவேண்டும். தற்போதைய சம்பா பருவத்தில் (ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட நெல் ரகங்களான கோ 50, டிகேஎம் 13, ஐஆர் 20, ஏடீடி 49, சிஆர் 1009 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி போன்ற 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களே இப்பருவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ரகங்களில் நெல் குலைநோய் மற்றும் தத்துப் பூச்சி தாக்குதலுக்கு திர்ப்புத்திறன் கொண்ட கோ 50, கோ 51, ஏஎஸ்டி 16, ஏடீடி 38, ஏடீடி 39, பிபிடி 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்கள் தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும், கள்ளிப்பட்டி, நால்ரோடு மற்றும் காசிபாளையம் துணை வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்றவைகளும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story