திருப்பத்தூரில் ரூ.100 கொடுத்து ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமி
திருப்பத்தூரில் இரும்புக்கடை ஊழியரிடம் ரூ.100-யை கொடுத்து, டீ வாங்க வெளியில் அனுப்பி விட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமி நூதனமாக திருடிச் சென்றார்.
திருப்பத்தூர்
பண வசூலுக்கு சென்ற உரிமையாளர்
திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பவுசநகர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் வினோத்குமார் (வயது 28). இவருடைய கடையில் சரத்குமார் (18) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இரும்புப்பொருட்களை விற்பனை செய்து நிலுவை தொகையை வசூல் செய்து வர விேனாத்குமார் தினமும் மாலை நேரத்தில் வெளியில் செல்வது வழக்கம்.
அதேபோல் ேநற்று முன்தினம் மாலை ஊழியர் சரத்குமாரை இரும்புக்கடைைய பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு அதன் உரிமையாளா் வினோத்குமார் பண வசூலுக்காக வெளியில் சென்று விட்டார். இரவு அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் மோட்டார்சைக்கிளில் இரும்புக்கடைக்கு வந்து, சரத்குமாரிடம் ரூ.100-யை கொடுத்து டீ வாங்கி வரும்படி கூறினார்.
டீக்குடித்து விட்டு செல்லுங்கண்ணா..
பணத்தைப் பெற்ற சரத்குமார், இரும்புக்கடைக்கு வந்தவர் வழக்கமான வாடிக்கையாளர்போல் இருக்கிறது, என நினைத்துக்கொண்டு மர்ம ஆசாமிக்கு டீ வாங்குவதற்காக வெளியில் சென்று விட்டார். அவர் வெளியில் சென்றதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட மர்மஆசாமி, கடையில் உள்ள கல்லாப்பெட்டியைத் திறந்து, அதிலிருந்த ரூ.2 லட்சத்தை நூதனமாக திருடிக்கொண்டு வெளியேறும் தருவாயில், சரத்குமார் டீ வாங்கி விட்டு இரும்புக்கடைக்குள் வந்து நுழைந்தார்.
எதையும் அறியாத ஊழியர் சரத்குமார், ‘டீக்குடித்து விட்டு செல்லுங்கண்ணா’.. எனக் கூறி உள்ளார். ஆனால் பலே திருடன், வேண்டாம் தம்பி எனக்கூறி ‘டாடா’ காட்டி விட்டு அங்கிருந்து நைசாகத் தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரத்துக்கு பின் தன்னுடைய இரும்புக்கடைக்கு வந்த உரிமையாளர் வினோத்குமார் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சரத்குமாரிடம் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் எங்கே? என உரத்தக்குரலில் கேட்டபோது, எனக்கு ஒன்றும் தெரியாது எனப் பதில்
அளித்துள்ளார்.
குடிக்காமலேயே சென்று விட்டார்
கடைக்கு யாரேனும் வந்தார்களா? எனக் கேட்டபோது, தங்களுக்கு தெரிந்த ஒருவர் வந்து என்னிடம் ரூ.100-யை கொடுத்து டீ வாங்கி வரச் சொன்னார், நான் டீ வாங்கி வந்ததும், அதைக் குடிக்காமலேயே அவர் சென்று விட்டார், எனத் தெரிவித்தார்.
இரும்புக்கடைக்கு வந்த மர்மஆசாமி தான் பணத்தைத் திருடிச் சென்றிருக்க வேண்டும் என நினைத்து வினோத்குமார் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இரும்புக்கடைக்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை ெசய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமாக ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story