பொள்ளாச்சியில் முழு ஊரடங்கை பயன்படுத்தி சாலை விரிவாக்க பணிகள்


பொள்ளாச்சியில் முழு ஊரடங்கை பயன்படுத்தி சாலை விரிவாக்க பணிகள்
x
தினத்தந்தி 26 April 2021 5:15 AM IST (Updated: 26 April 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நேற்று முழு ஊரடங்கை பயன்படுத்தி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் மிகவும் வளர்ந்து வரும் நகராட்சியாக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நாளுக்கு நாள் போக்குவரத்து பெருகி வருகிறது. இதன் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு, அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படு கின்றன.

 இதனை தடுக்க பொள்ளாச்சி- உடுமலை மெயின்ரோடு மரப்பாலம் முதல் கோவை ரோடு சி.டி.சி.மேடு வரை ரூ.34.51 கோடி செலவு மதிப்பீட்டில் நகரத்தின் முக்கிய சாலைகள் 4 வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

தானியங்கி சிக்னல் அகற்றம்

நேற்று முழு ஊரடங்கு காரணமாக சாலைகளில் போக்குவரத்து இல்லாததால் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள ரோடு, பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் உள்ள சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்தது.

பஸ் நிலையம் அருகில் ரவுண்டானா அமைப்பதற்காக போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் ராட்ச எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் போக்குவரத்து பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஊரங்கை பயன்படுத்தி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த பணிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Next Story