பீட் மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகொலை மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
பீட் மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மர்ம ஆசாமி படுகொலை செய்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பீட்,
பீட் மாவட்டம் அம்பாஜாகை தாலுகா பகுதியை சேர்ந்த பெண் லோச்சனா(வயது45). இவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் அங்குஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கேஜ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் சாலேகாவ் கிராமம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார்.
பின்னர் திடீரென பின்னால் அமர்ந்திருந்த பெண் லோச்சனா மீது தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கினார். இதனை கண்ட அங்குஷ் அவரை தடுக்க முயன்று உள்ளார்.
இதில் அவருக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த தாக்குதலில் படுகாமடைந்த லோச்சனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அங்குசை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பெண்ணின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story