குலசேகரன்பட்டினத்தில் மதுவிற்ற 2பேர் கைது


குலசேகரன்பட்டினத்தில் மதுவிற்ற 2பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 7:00 PM IST (Updated: 26 April 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

குலேசகரன்பட்டினத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று முழு ஊரடங்கின்போது ரோந்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் ரோடு இசக்கியம்மன் கோவில் விலக்கு அருகே, சிலர் மது விற்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர், மதுபாட்டில்களுடன் இருந்த திருப்பூர் முதலியார் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மூக்காண்டி மகன் முருகன் (வயது 35), உடன்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் (45) ஆகிய இருவரையும்  கைது செய்தார்.

Next Story