சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு
பெரியகுளத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், மாடுகளை தீவனம் கொடுத்து கட்டிபோட்டு வளர்க்காமல், சாலையில் விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது விலங்குகள் கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மாடுகளை சாலைகளில் விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன் முகமது மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story