உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு அரவைக்காக, கரும்பு நடவு பணிகள் நடந்து வருகிறது.


உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு அரவைக்காக, கரும்பு நடவு பணிகள் நடந்து வருகிறது.
x
தினத்தந்தி 26 April 2021 9:00 PM IST (Updated: 26 April 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு அரவைக்காக, கரும்பு நடவு பணிகள் நடந்து வருகிறது.

உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு அரவைக்காக, கரும்பு நடவு பணிகள் நடந்து வருகிறது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டின் கரும்பு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பு பயிரிடுவதற்கான பணிகள், நடப்பு ஆண்டின் போது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலம் நடவு பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி 2020-2021ம் ஆண்டு அரவை பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த 16-ந் தேதி தொடங்கியது.நேற்று காலை வரை 2 ஆயிரத்து 231 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
 கரும்பு நடவு
இந்த நிலையில் 2021-2022- ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பை பதிவு (ஒப்பந்தம்) செய்வதற்காக 2020-2021ம் ஆண்டு நடவு பருவத்திற்கு 4,500 ஏக்கர் கன்னி கரும்பும், 1,500 ஏக்கர் கட்டை கரும்பும் பதிவு (ஒப்பந்தம்) செய்து பெறுவது என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு கரும்பு அரவைப்பருவத்தில் ஆலை அரவைக்கு (2021-2022) 2 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஆலையின் மேலாண்மை இயக்குநர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், கரும்பு பெருக்கு அலுவலர் ஏ.சுப்புராஜ் மேற்பார்வையில் ஆலையின் கரும்பு பகுதி கோட்ட கரும்பு அலுவலர்கள், களப்பணியாளர்கள் ஆகியோர் ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளை நேரில் அணுகி கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். அத்துடன் கரும்பு பயிருக்காக அமராவதி அணையில் இருந்து மே, ஜுன், ஜுலை ஆகிய 3 மாதங்களிலும், மாதத்திற்கு 10 நாட்கள் வீதம் தண்ணீர் திறந்து விடும்படி அரசுக்கு, சர்க்கரை ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பல விவசாயிகள் கரும்பு நடவு செய்வதற்காக தங்களது நிலத்தை உழுது தயார்படுத்தி வைத்துள்ளனர்.
கரும்பு நடவு
இந்த நிலையில் அமராவதி அணையில் இருந்து தற்போது குடிநீருக்காக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்குட்பட்டபகுதிகளான அமராவதி பாசன பகுதியில் விவசாயிகள் கரும்பு நடவு பணிகளை செய்து வருகின்றனர். இருபரு கரணைகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. 
இதுவரை 30 ஏக்கரில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நடவு பணிகள் நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story