தேனி மாவட்டத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 162 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர், பெரியகுளத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர், மேல்மங்கலத்தை சேர்ந்த டாக்டர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொரோனா நல மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை பெற்றவர்களில் 132 பேர் நேற்று குணமாகினர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மாவட்டத்தில் 17 ஆயிரத்து 775 பேர் மீண்டுள்ளனர்.
2 பேர் சாவு
இதற்கிடையே போடேந்திரபுரத்தை சேர்ந்த 40 வயது கூலித்தொழிலாளி கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதுபோல், தேனியை சேர்ந்த 52 வயது நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Related Tags :
Next Story