தாராபுரத்தில் சமூக இடைவெளியை மறந்து டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் குவிந்து வருகின்றனா்.


தாராபுரத்தில் சமூக இடைவெளியை மறந்து டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் குவிந்து வருகின்றனா்.
x
தினத்தந்தி 26 April 2021 9:11 PM IST (Updated: 26 April 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் சமூக இடைவெளியை மறந்து டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் குவிந்து வருகின்றனா்.

குண்டடம்
தாராபுரத்தில் சமூக இடைவெளியை மறந்து டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் குவிந்து வருகின்றனா்.  

டாஸ்மாக் கடை  

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. தாராபுரத்தில் கடந்த முறை கொரோனா பரவலின் போது டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளி வட்டங்கள் வரையப்பட்டன. அதில் நின்று வாிசையாக சென்று மதுப்பிாியா்கள் மது வாங்கி சென்றனா். ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை வீாியமிக்கதாக பரவி வருகிறது. வடமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிாிழந்து வருகின்றனா். 
அதனை இங்குள்ளவா்கள் சமூக வலை தளங்கள் மூலமாகவும், பத்திாிக்கைகள் மூலமாகவும் பாா்த்து வருகின்றனா். இருப்பினும் மக்கள் பல்வேறு சமயங்களில் சமூக இடைவெளி, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றை மறந்து விடுகின்றனா். போலீசார் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே முக கவசம் அணிந்து வராதவா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

நடவடிக்கை எடுப்பார்களா?

சுகாதாரத்துறை, வருவாய் துறை, நகராட்சி அதிகாாிகள் முழுமையாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவது இல்லை. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் இதுபோன்று சமூக இடைவெளியை மறந்தும், முக கவசம் அணியாமலும் நின்று மதுவாங்கி செல்கின்றனா். அதுபோன்று தாராபுரம் பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் திருப்பூா், கோவை பகுதிகளுக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. அதனால் இருக்கிற பஸ்களை பிடித்து வேலைக்கு செல்ல வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 
பஸ் டிரைவா், கண்டக்டா்களும் தங்களுக்கு வருமானம் கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் அரசு விதிகளை மீறி பஸ்களில் நின்றவாறு பயணம் செய்ய பயணிகளை அனுமதிக்கின்றனா். இதனால் கொரோனா தொற்றுவேகமாக பரவும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடைகள், பஸ்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, அனைவரையும் முக கவசம் அணிந்து வர செய்ய வேண்டும் என தாராபுரம் பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story