காங்கேயம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து


காங்கேயம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 26 April 2021 9:14 PM IST (Updated: 26 April 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

காங்கேயம்
வெள்ளகோவில் பகுதியில் இருந்து நூல் பண்டல் பாரம் ஏற்றி கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லாரியை டிரைவர் ஸ்டாலின் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை பகுதியில் சிக்கரசம்பாளையம் பிரிவு நால்ரோடு அருகே வந்துகொண்டிருந்த போது லாரி திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று உள்ளே இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் டிரைவர் ஸ்டாலின் மற்றும் உடனிருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் டிரைவர்  உள்பட 3 பேரையும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியை சங்கிலியால் பிணைக்கப்பட்டு மேலே தூக்கி சாலையின் ஓரமாக நிறுத்தினர். பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story