காங்கேயம் பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
காங்கேயம் பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
காங்கேயம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கேயம் நகராட்சி சார்பில் பஸ் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கேயம் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், கடை வீதி, அரசு மருத்துவமனை, அம்மா உணவகம், ஏ.டி.எம்.மையங்கள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும் பஸ் நிலையக்கடைகள், தினசரி மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க, முக கவசம் அணிய வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பஸ் நிலையத்தில் நின்று செல்லும் பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story