10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் விபரீதம்


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 26 April 2021 9:25 PM IST (Updated: 26 April 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் மனமுடைந்து 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலக்குளம்,

புதுவை மூலக்குளம் சாலை தெருவை சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா (வயது 50). இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் (வயது 16). ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மகளை கதிர்காமம் அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். தனது தோழிகள் ஒரே பள்ளியில் படிக்கும்போது, தன்னை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தது குறித்து இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மனம் வருந்தினார்.

நேற்று முன்தினம் காலை ஜான்பிராஸ்வாவும், அவரது மனைவி ஜெனிதா மேரியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மின்விசிறியில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story