கலவை அருகே கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம். இட்லி புளிக்கிறது-சாம்பார் புகை நாற்றம் அடிக்கிறது என புகார்


கலவை அருகே கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம். இட்லி புளிக்கிறது-சாம்பார் புகை நாற்றம் அடிக்கிறது என புகார்
x
தினத்தந்தி 26 April 2021 9:35 PM IST (Updated: 26 April 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் இட்லி புளிக்கிறது. சாம்பார் புகை அடிக்கிறது என புகார் கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலவை

கொரோனா நோயாளிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் பல்வேறு தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறது. அதன்படி கலவை அருகே உள்ள தனியார் கல்லூரியிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர். இவர்களுக்கு தினமும் உணவு அங்கேயே வழங்கப்பட்டு வருனகிறது.

இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி அளவில் கல்லூரி வளாகத்ததிற்குள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களுக்கு சரியான உணவு வசதியில்லை. அவ்வாறு வழங்கப்படும் உணவு புகை நாற்றம் அடிக்கிறது. சாம்பாரும் புகை நாற்றம் அடிக்கிறது. இட்லி புளிப்பாகவும், முட்டை ஜவ்வு போலவும் உள்ளது. டீ, காபி குடிப்பதற்கு பேப்பர் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு வருவதில்லை.

கழிப்றையும் தினசரி சுத்தம் செய்யப்படுவதில்லை கிருமிநாசினி அடிப்பதில்லை. பிளீச்சிங் பவுடரும் போடப்படுவதில்லை என புகார் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

தகவலறிந்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வேதமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் உணவு வழங்குவதில் உள்ள குறைகள் களையப்பட்டு தரமான உணவு வழங்கப்படும். கழிப்பறையும் உடனுக்குடன் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்று அங்கிருந்து தாங்கள் தங்கிய அறைகளுக்கு திரும்பினர்.

Next Story