மத்திய சமையல் கூடத்தில் கவர்னர் திடீர் ஆய்வு உணவுப் பொட்டலம் வாங்கி சென்றார்
மத்திய சமையல் கூடத்தில் கவர்னர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மலிவு விலையில் (ரூ.10-க்கு) உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மேலும் பல இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாண்லே பாலகங்களில் உணவு வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு உணவு தயாரிக்கும் முறைகளை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் மதிய உணவு சாப்பிட உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி சென்றார்.
Related Tags :
Next Story