திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா
திருப்பூர்
திருப்பூர் வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சீலாதேவி (வயது 27). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களது வீ்ட்டின் அருகே கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக ஊராட்சித் தலைவர், வட்ட வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் என பலரிடம் கடந்த 3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் குடியிருப்பு பகுதியில் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த மனு தொடர்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து இளம்பெண் குடும்பத்துடன் வீட்டிற்கு சென்றார்.
Related Tags :
Next Story