ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
திருப்பூர்
ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள்
நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் தொடர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
முழு ஊரடங்கு அச்சம் காரணமாக திருப்பூரில் பணியாற்றி வரும் ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரெயில் மூலமாக சென்ற வண்ணம் உள்ளனர்.
ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்கள் திருப்பூர் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story