மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த பரிதாபம்
நாகூரில், மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே தகனம் செய்யப்பட்டது.
நாகூர்:
நாகூரில், மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே தகனம் செய்யப்பட்டது.
இறப்பிலும் இணைபிரியா இந்த தம்பதி குறித்த விவரம் வருமாறு:-
இணைபிரியா தம்பதி
நாகையை அடுத்த நாகூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் புயல்மணி (வயது 69). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(63). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
புயல்மணியும், லட்சுமியும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.
கடந்த சில மாதங்களாக லட்சுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதே என்று புயல்மணி மிகுந்த கவலையில் இருந்து வந்தார்.
இறப்பிலும் இணைந்தனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் ரவிக்குமார் மற்றும் அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் புயல்மணிக்கு தெரிய வந்ததும் அவர் மிகுந்த வேதனை அடைந்தார். இத்தனை ஆண்டுகாலம் இணைபிரியாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த தனது மனைவி தன்னை பரிதவிக்க விட்டு சென்றதை அறிந்து புயல்மணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். துக்கம் தாங்காமல் அடுத்த 1 மணி நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
அருகருகே தகனம் செய்தனர்
வாழ்வில் இணைபிரியாமல் இருந்து வந்த இந்த தம்பதியினர், சாவிலும் இணைபிரியாமல் ஒன்றாக இறந்ததை அறிந்து புயல்மணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து தம்பதியினரின் உடல்களை ஒன்றாக வைத்து இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் இருவரது உடல்களையும் தனித்தனியாக எடுத்துச்ெசன்று அருகருகே தகனம் செய்தனர்.
Related Tags :
Next Story