வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் மனு
வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் மனு கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி
வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் மனு கொடுக்கப்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் வக்கீல் இமயவரம்பன் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட தாலுகாக்களில் வடமாநில தொழிலாளர்கள், கட்டிட பணிகள், தொழிற்சாலை, உணவகங்கள் மற்றும் விவசாய பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு தொடர்பாக அவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் சுகாதாரத்துறை மூலமாக மேற்கொள்ளப்படவில்லை. மேலும் அவர்களுக்கு மருத்துவ வசதிகளும் வழங்கவில்லை.
எனவே பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
100 நாட்கள் வேலை திட்டம்
பா.ஜனதா கட்சியின் ஆனைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துரைசித்தூர், ரமணமுதலிபுதூர், தென்சங்கம்பாளையம், அங்கல குறிச்சி, மஞ்சநாயக்கனூர், கம்பாலப்பட்டி, பில் சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், அர்த்தநாரிபாளையம், எஸ்.நல்லூர் ஆகிய ஊராட்சிகளில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன.
இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story