ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை, பணம் திருட்டு


ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 26 April 2021 10:33 PM IST (Updated: 26 April 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை, பணம் திருட்டு

ஜோலார்பேட்டை

கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியை சேர்ந்தவர் ரவி ராஜேந்திரா. இவரது மகன் சரிரெட் சன்னி (வயது35). இவர் கடந்த 24-ந் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ெரயிலில் பயணம் செய்தார். நள்ளிரவு நேரத்தில் ஜோலார்பேட்டை- காட்பாடி இடையே சென்றபோது தூங்கிக் கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச்சென்றுள்ளனர்.

அந்த பையில் தங்க செயின், தங்க மோதிரம் உள்ளிட்ட 68 கிராம் நகைகள், செல்போன், பணம் ரூ.50 ஆயிரம் இருந்தது. நகை, பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கேரள மாநிலம் ஆலப்புழை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆலப்புழை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், ஓடும் ரெயிலில் நகை திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்.

----
Reporter : KALAISELVI MURALI  Location : Vellore - JOLARPET

Next Story