குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 April 2021 10:40 PM IST (Updated: 26 April 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கணபதி

கோவை கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்யா (வயது 27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக சத்யா மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story