மூங்கில்துறைப்பட்டு அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூரில் புதிதாக கட்டப்பட்டு்ள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னர் நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணி அளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், கலாகர்ஷணம் கும்ப அலங்காரமும் நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜை, 2-ம் கால யாகபூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இது முடிந்ததும் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணி அளவில் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story