சலூன் கடைகளை தினமும் 5 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும்
சலூன் கடைகளை தினமும் 5 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என சவரத்தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா முதல் அலையின்போது சலூன் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமப்பட்டு வந்தோம். ஏற்கனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் கடைகளை அடைக்க செல்வதால் மேலும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும்.
பல கடைகள் திறக்கப்பட்டிருக்கும்போது சலூன் கடையை மட்டும் மூட சொல்வது நியாயம் இல்லை. அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
எனவே தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 5 மணி நேரம் வரை மட்டும் கடைகளை திறந்து முடிதிருத்தும் பணி செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story