தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது


தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 10:44 PM IST (Updated: 26 April 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் மலையம்மன் கோவில் அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் மட்டும் சிக்கினர். விசாரணையில் அவர்கள் தியாகதுருகம் கலையநல்லூரை சேர்ந்த கேசவன் மகன் கஜேந்திரன்(வயது 18) மற்றும் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தப்பி ஓடியவர் கரீம்ஷாதக்கா பகுதியை சேர்ந்த உசேன் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கஜேந்திரன் உள்பட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாபொட்டலம், மோட்டார் சைக்கிளை பறிமுதல்செய்தனர். விசாரணைக்கு பிறகு கஜேந்திரனை கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்த போலீசார் சிறுவனை கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் தப்பி ஓடிய உசேனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story