மின்னல் தாக்கி 10 ஆடுகள் செத்தன


மின்னல் தாக்கி 10 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 26 April 2021 10:47 PM IST (Updated: 26 April 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே மின்னல் தாக்கி 10 ஆடுகள் செத்தன.

சேத்தியாத்தோப்பு, 

கடலூர் அடுத்த வெள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் செல்லப்பிள்ளை (வயது 40). இவர் 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். 

நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக சேத்தியாத்தோப்பு அடுத்த செட்டிக்குளம் பகுதிக்கு ஓட்டி சென்றிருந்தார். அங்குள்ள ஆலம்மரம் உள்ள பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.

 அப்போது மின்னல் தாக்கியதில், 10 ஆடுகள் பரிதாபமாக செத்தன. இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story