சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி


சின்னசேலம் அருகே  லாரி மோதி பெண் பலி
x
தினத்தந்தி 26 April 2021 10:58 PM IST (Updated: 26 April 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி

சின்னசேலம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெல்லுவாடி கிராமம், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து(வயது 32) விவசாயி. இவர் தனது மனைவி கனகா(28) உடன் மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் அருகே உள்ள குமாரபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் - குரால் சாலையில் பாக்கம்பாடி பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி சோலைமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த சோலைமுத்து, கனகா இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கனகா பரிதாபமாக இறந்தார். சோலைமுத்துவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story