கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி 171 பேருக்கு தொற்று
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 11 ஆயிரத்து 970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 334 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 108 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். இதையடு்த்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 260 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 141 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story