மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் பலி
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
வேலாயுதம்பாளைம்
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் பலி
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நாணப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 52). இவர் புன்செய் புகளூர் பேரூராட்சியின் 4-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இவர் கரூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் நாணப்பரப்புக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாணப்பரப்பு பிரிவு சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளை காந்தி திருப்பினார்.
அப்போது பின்னால் சேலம் நோக்கி சரக்குகள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக காந்தி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வலைவீச்சு
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story