20 கிலோ கடல் அட்டைகளுடன் முதியவர் கைது


20 கிலோ கடல் அட்டைகளுடன் முதியவர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 11:17 PM IST (Updated: 26 April 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

20 கிலோ கடல் அட்டைகளுடன் முதியவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் நேற்று மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பிளாஸ்டிக் சாக்கில் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர்  எம்.ஜி.எஸ்.நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 60) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story