திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. வாகன புறப்பாடு கோவிலுக்குள் நடந்தது. தற்போது பக்தர்கள் இன்றி நேற்று தங்க பல்லக்கில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் எழுந்தருளினார்.தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.