லாட்டரி சீட்டுகளுடன் டீக்கடைக்காரர் கைது


லாட்டரி சீட்டுகளுடன் டீக்கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 11:22 PM IST (Updated: 26 April 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டுகளுடன் டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்

ராமநாதபுரம், 
லாட்டரி சீட்டு விற்பது தொடர்பாக கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சின்னக்கடை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சின்ன கடை பகுதியில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜன் என்பவரின் மகன் பத்மநாதன் (வயது 46) என்பவரின் டீக்கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரின் கடையில் இருந்தும் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் இருந்தும் 13ஆயிரத்து 500 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ 10 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதுதவிர லாட்டரி சீட்டு விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரத்து 500 மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பத்மநாதனை கைது செய்த கேணிக்கரை போலீசார் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த லாட்டரி சீட்டுகளை அச்சடித்து வழங்கிய உச்சிப்புளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story