மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம்; முதியவர் கைது


மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம்; முதியவர் கைது
x
தினத்தந்தி 26 April 2021 11:38 PM IST (Updated: 26 April 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
ராமநாதபுரம் தங்கப்பா நகர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜெயச்சந்திரன் என்பவரின் மனைவி ராஜாத்தி (வயது63) என்பவரை பலமாக தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் படுகாயம் அடைந்த ராஜாத்தி மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். நேற்று அவருக்கு நினைவு திரும்பிய நிலையில் போலீசார் அவரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 
இந்த விசாரணையில் மேற்கண்ட ராஜாத்தியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இப்ராகிம்சா என்பவரின் மகன் தாவூது (63) என்பவர் கோழிக்குஞ்சை தேடுவதாக கூறி வீட்டிற்குள் வந்ததாகவும் தண்ணீர் கேட்பதுபோல நடித்து அவரின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்ற போது கூச்சலிடவே சுத்தியலால் தலையில் பலமாக தாக்கி விட்டு நகையை பறித்துச் சென்று விட்டதாகவும் ராஜாத்தி தெரிவித்துள்ளார். 
பறிமுதல்
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து தாவூதை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 2 நாட்களில் போலீசார் தீவிர துப்புதுலக்கி குற்றவாளியை கைது செய்துள்ளதற்கு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

Next Story