கும்பாபிஷேக விழா
சதுர்யுக வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடியில் சதுர் யுக வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. டி.எம். கோட்டை செஞ்சடை நாதர் கோவில் சிவஸ்ரீ வெங்கடேஸ்வர குருக்கள் தலைமையில் கடம் புறப்பாடு செய்யப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் சேர்மன் வேல்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி சேர்மன் முகமது ஜின்னா, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன், யாதவர் சங்கத்தலைவர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட அனைத்து சமுதாய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story