போலீசாரை பார்த்து ஓட்டம் பிடித்த மாடுபிடி வீரர்கள்


போலீசாரை பார்த்து ஓட்டம் பிடித்த மாடுபிடி வீரர்கள்
x
தினத்தந்தி 26 April 2021 11:54 PM IST (Updated: 26 April 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்து மாடுபிடி வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பிறகு கோவில்பட்டி வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர். இதில் ஏராளமான மாடுகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாடுபிடி வீரர்கள் அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

Next Story