கடவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே கடவூரில் வாரிபுறம் போக்கினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்பேரில் கடவூர் தாசில்தார் வித்யாவதி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சுப்பிரமணி, மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றினர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story