கொரோனா விழிப்புணர்வு கூட்டம்
கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கீழக்கரை,
தமிழகத்தில் கொரானா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்ட மைப்பில் அனைத்து ஜமாஅத்தார்கள் மற்றும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனை வரும் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ஒத்துழைப்பு அளித்து வெளியில் செல்லக்கூடியவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கபடும். மேலும் இதுகுறித்து அனைத்து பள்ளிகளிலும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஜமாத்தார்கள் இதற்கு உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் சத்தான உணவுகளை அருந்தி, சுடு நீரை பயன்படுத்துமாறும் மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரியும் சிறுவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப் பட்டது.மேலும் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 மணிக்குமேல் தேவை இல்லாமல் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story