5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி
செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கல்லல்,
கல்லல் ஒன்றியம் செம்பனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 5 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சி பணியாளர்கள், போலீசார், தனியார் மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு 2-வது தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை. எனவே மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை போட்டு்க்கொள்ள முன் வர வேண்டும் என்று வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story