கொரோனாவால் இளம்பெண்ணுக்கு மூச்சு திணறல்
கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சு வரதாமதம் ஏற்பட்டதால் சற்றும் தாமதிக்காமல் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ராமநாதபுரம்,
கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சு வரதாமதம் ஏற்பட்டதால் சற்றும் தாமதிக்காமல் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தொற்று உறுதி
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சக்கரக்கோட்டை ஊராட்சி. இங்குள்ள பாரதிநகரை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் இங்குள்ள அவரின் மனைவி இளம்பெண்ணுக்கு சளி, காய்ச்சல், மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்பினால் அவதிப்பட்டுள்ளார். கடந்த 23-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 24-ந் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
இதனை தொடர்ந்து மறுநாள் மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல், உதவியாளர் ஹரி உள்ளிட்டோர் அங்கு சென்று அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் ஆம்புலன்சு வராத நிலையில் இளம்பெண் மூச்சுதிணறலால் கடும் அவதிப்பட்டுள்ளார்.
அனுமதி
இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் உதவியாளர் ஹரி, ஊராட்சி தலைவரின் மகன் கந்தகுமார் ஆகியோர் உதவியுடன் ஊராட்சி செயலாளர் விமல் தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொரோனா வார்டில் அனுமதித்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையின் பயனாக இளம்பெண் தற்போது உடல்நலத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலரின் இந்த துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
Related Tags :
Next Story