கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சரிவிகித உணவு வழங்க வேண்டும்- மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவுறுத்தல்


கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சரிவிகித உணவு வழங்க வேண்டும்-  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2021 12:25 AM IST (Updated: 27 April 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சரிவிகித உணவு வழங்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் rசசி தீபா அறிவுறுத்தினார்.

நெல்லை, ஏப்:
கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா அறிவுறுத்தினார்.

கொரோனா சிகிச்சை மையங்கள்

கொரோனா தொற்று 2-வது அலை பாதிப்பின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம், நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சரிவிகித மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்கிறது.

தற்போது நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இதர கொரோனா நோயாளிகள் இதர சிகிச்சை மையங்களான நெல்லை சித்த மருத்துவ கல்லூரி, பத்தமடை சுவாமி சிவானந்தா மருத்துவமனை, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை மகாராஜ நகர் மாநகராட்சி திருமண மண்டபம் ஆகியவற்றிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவகங்களில் ஆய்வு

மேற்கண்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு சரிவிகித மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை, நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா மற்றும் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் உணவகங்களை ஆய்வு செய்தனர். அப்போது உணவகங்களில் தயாரித்து வழங்கப்படும் உணவானது அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சரிவிகித உணவாகவும் மற்றும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா அறிவுறுத்தினார்.

Next Story