பழனி அருகே அணை பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
பழனி அருகே அணை பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை இறந்து கிடந்தது. தாயின் உடல் அருகில் குட்டி யானை பரிதவித்தது.
பழனி:
பழனி அருகே அணை பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை இறந்து கிடந்தது. தாயின் உடல் அருகில் குட்டி யானை பரிதவித்தது.
இறந்து கிடந்த யானை
பழனி பாலாறு-பொருந்தலாறு அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மலையடிவாரத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடு மேய்க்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆடு மேய்க்க சென்றபோது, அணையின் ஜீரோபாய்ண்ட் அருகில் உள்ள வனப்பகுதியில் பெண்யானை ஒன்று இறந்த நிலையிலும், அருகில் குட்டி யானை ஒன்று அதை சுற்றி வந்ததையும் கண்டனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் பழனி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பரிசோதனைக்காக யானையின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் யானையின் உடல் அந்த வனப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
குட்டி யானை
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணை பகுதியில் இறந்த கிடந்த பெண் யானைக்கு சுமார் 15 வயது இருக்கும். அதுபோல் அந்த குட்டி யானை பிறந்து 3 மாதங்கள் இருக்கலாம். தற்போது அது பால்குடிக்கும் பருவத்தில் உள்ளதால், பரிதவித்தபடி இருக் கிறது. எனவே அதை முகாம் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்க உள்ளோம். மேலும் பரிசோதனைக்கு பின்னரே அந்த பெண் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றனர்.
Related Tags :
Next Story